search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்.டி.பி.ஐ. கட்சி"

    • எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • முடிவில் திருப்புல்லாணி நகர் தலைவர் சாதிக்குல் அமீன் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் எஸ்.டி. பி.ஐ. கட்சியின் மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பாக தொகுதி தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் திருப்புல்லாணியில் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட தொகுதி, நகர, கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    தொகுதி பொருளாளர் கீழை அஸ்ரப் தொகுப்புரை வழங்கினார். செயற்குழு உறுப்பினர் குதுபுதீன் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் ரம்ஜான் பேகம் கருத்துரை வழங்கினார். மாவட்ட பொது செயலாளர் அப்துல் ஜமீல், தமிழ் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது ஆகியோர் பேசினர். மாநில தலைவர் நெல்லை முபாரக் கொள்கை விளக்க சிறப்புரையாற்றினார்.

    இதில் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான், கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் சோமு, கிழக்கு மாவட்ட பொருளாளர் அசன் அலி, மேற்கு சட்ட மன்ற தொகுதி செயலாளர் அக்பர் அலி, தொகுதி துனை தலைவர் மூர்த்தி, தொகுதி செயற்குழு உறுப்பி னர்கள் பாரூக் ராஜா முஹம்மது, சாதிக் சலீம் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சந்தன பீர், மேற்கு மாவட்ட செயலாளர் ஆசாத், மேற்கு சட்டமன்றத் தொகுதி தலைவர் நவர்சா, வர்த்தக அணி மாவட்ட தலைவர் சகுபர் சாதிக், மாவட்ட ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் சுபைர் அப்தீன், முஸ்தாக் அஹமத், முன்னாள் மாவட்ட பொருளாளர் ரபீக், மாவட்ட துணை தலைவர் முபீனா மற்றும் பெரிய பட்டினம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் புரோஸ் கான், கீழக்கரை 18-வது வார்டு நகர்மன்ற உறுப்பி னர் சஹீனா பேகம் கிழக்கு, மேற்கு மாவட்ட தொகுதி, நகர, கிளைகளின் நிர்வாகி கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். முடிவில் திருப்புல்லாணி நகர் தலைவர் சாதிக்குல் அமீன் நன்றி கூறினார்.

    • ராமநாதபுரம் மேற்கு தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சியன் பொதுக்குழு கூட்டம் தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் நடந்தது.
    • ஊடக பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் நன்றி கூறினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மேற்கு தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சியன் பொதுக்குழு கூட்டம் தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் ஜஹாங்கீர் அரூஷி, கிழக்கு மாவட்ட தலைவர் பெரியபட்டினம் ரியாஸ்கான் ஆகியோர் பங்கேற்று பேசினர். தொகுதி தலைவர் அப்துல் வஹாப் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் சோமு மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். திருப்புல்லாணி பொக்கனாரேந்தல் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் எஸ்.டி.பி.ஐ. கட்சியில் சேருவதற்கான படிவத்தை மாவட்ட துணை தலைவர் சோமு வழங்கினார். அதனை தொடர்ந்து அனைத்து நகர நிர்வாகிகளுக்கும் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கப்பட்டது. வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி தொகுதிக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் கீழக்கரை, திருப்புல்லாணி,பெரியபட்டினம் நகர் நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.ஊடக பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் நன்றி கூறினார்.

    • திருப்பூர் விஜயாபுரம் பெம் ஸ்கூல் அருகில் கொங்கு மண்டல மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4மணிக்கு நடக்கிறது.
    • திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் பஷீர் அகமது வரவேற்று பேசுகிறார்.

    திருப்பூர் :

    கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றிட வேண்டும், தமிழக தனியார் ேவலைவாய்ப்பில் தமிழர்களுக்கு 75 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். கொங்கு மண்டலத்தில் நலிந்து வரும் தொழில் வளத்தை பாதுகாத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் திருப்பூர் விஜயாபுரம் பெம் ஸ்கூல் அருகில் கொங்கு மண்டல மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4மணிக்கு நடக்கிறது. மாநாட்டிற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கோவை மண்டல தலைவரும் மாநில செயற்குழு உறுப்பினருமான ராஜா உசேன் தலைமை தாங்குகிறார். திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் பஷீர் அகமது வரவேற்று பேசுகிறார்.

    மாநில தலைவர் நெல்லை முபாரக் , கொங்குநாடு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஹைதர் அலி, தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன், மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி, ஜோதிமலை இறைப்பணி திருக்கூடம் திருவடிக்குடில் சுவாமிகள், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை தலைவர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, பா.ம.க. மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் சேக் முகைதீன், திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம், தமிழக வாழ்வுரிமை கட்சி கொள்கை பரப்பு செயலாளர் திருப்பூர் சுடலை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர்.

    எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் அகமது நவவி, உமர் பாரூக், நிஜாம் முகைதீன், அம்ஜத் பாஷா, ஷபீக் அகமது, அபுதாஹிர், அப்துல் ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜாபிர் அகமது மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்டமாநாட்டு குழு நிர்வாகிகள், பல்லடம், தாராபுரம், அவினாசி தொகுதி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். முடிவில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஹாரிஸ் பாபு நன்றி கூறுகிறார்.  

    • நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரில் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் பச்சை தமிழகம், நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    நாகர்கோவில்:

    வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழகம் உள்பட நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் சத்தார் அலி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், தொகுதி நகர, கிளை தலைவர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜாபர் அலி வரவேற்றார்.

    மாவட்ட துணை தலைவர் ஜாஹிர் ஹுசைன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எஸ்.டி.பி.ஐ.கட்சியின் வர்த்தக அணி மாநில பொது செயலாளர் ஜாபர் அலி உஸ்மானி, பச்சை தமிழகம் மாநில தலைவர் சுப. உதயகுமார், நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட பொது செயலாளர் மணவை சாதிக் அலி ஆகியோர் கண்டன உரையாற்றினர். நாகர்கோவில் மாநகர தலைவர் மீரான் மைதீன் தங்கப்பா நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    • களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் இந்தி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பா.ஜ.க. அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்.

    களக்காடு:

    களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் இந்தி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பீர்மஸ்தான் தலைமை தாங்கினார். துணை பொருளாளர் இளையாராஜா, வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் ஜலில், துணை தலைவர் உசேன், தொகுதி தலைவர்கள், செய்யது, தவுபிக், செயலாளர் உசேன், ரிஸ்வான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சிராஜ் வரவேற்றார்.

    இதில் மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனி, புரட்சி பாரதம் மாவட்ட செயலாளர் நெல்சன், சி.பி.ஐ. ஒன்றிய செயலாளர் முருகன், ஐ.மு.மு.க. மாவட்ட தலைவர் சித்திக் புறநகர் மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா ஆகியோர் கண்டன உரையாற்றினார். நகர தலைவர் கமாலுதீன் செயற்குழு உறுப்பினர்கள், முகம்மது ரபிக், ஆரிப்பைஜீ, கபீர், ராம்நாடு பீர்முகம்மது, பத்தமடை நகர தலைவர் ஷெரிப், சேரன்மகாதேவி நகர தலைவர் அஹமது, கவுன்சிலர்கள் அப்துல் கபூர், ரஹ்மத்துல்லாஹ் உள்பட ஆண்கள், பெண்கள் என 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இந்தி திணிப்புக்கு எதிராகவும், பா.ஜ.க. அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினார்.

    • பெட்ரோல் குண்டை குடோனில் வீசி சென்றனர்.
    • 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    மேட்டுப்பாளையம்-கோவை சாலையில் ஆர்.எ ஸ்.எஸ். பிரமுகரான சச்சின் மற்றும் மதன்குமார் ஆகியோர் தனித்தனியாக பிளைவுட் கடை நடத்தி வருகின்றனர்.

    இந்த கடைகளில் கடந்த 22-ந் தேதி நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 4 பேர் கடையின் கண்ணாடியை உடைத்து பெட்ரோல் குண்டை குடோனில் வீசி சென்றனர்.

    இதில் பெட்ரோல் குண்டு வெடித்து அங்கிருந்த பிளைவுட்டுகள் எரிந்து கிடந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று பிளைவுட் கடைகளில் பெட்ரோல் குண்டு வீசியதாக மேட்டுப்பாளையம் சிராஜ் நகரை சேர்ந்த நாசர்அகமது(வயது30), ஷேக்பரித்(30) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    இவர்கள் 2 பேரும் எஸ்.டி.பி.ஐ. கட்சியில் உறுப்பினர்களாக உள்ளனர். தொடர்ந்து போலீசார் 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    கன்னியாகுமரி:

    நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையை தொடர்ந்து தற்போது அந்த இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் மத்திய அரசின் தடை உத்தரவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற உள்ளதாக உளவு பிரிவு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ள னர்.

    குமரி மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் தக்கலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம் நடத்த இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ் தலை மையில், திருவிதாங்கோடு சாலையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

    இதற்கிடையில் போராட்டத்திற்காக எஸ்.டி.பி.ஐ. கட்சியனர் ஒவ்வொருவராக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அமைப்பின் மாநில நிர்வாகி செரீப் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • தி.மு.க. அரசு மக்களை திணற வைக்கிறது.
    • கைகளில் சிமினி விளக்கேந்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    மின்கட்டண உயர்வை கண்டித்துஎஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சிமினி விளக்கேந்தி திருப்பூர் மாநகராட்சி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பசீர் அகமது தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாதிக் பாஷா வரவேற்றார். தி.மு.க. அரசின் மக்களை திணற வைக்கும் மின்கட்டண உயர்வை கண்டித்தும், மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்தக்கோரியும், மின்கட்டண உயர்வு முடிவை கைவிடக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பேச்சாளர் சேக் அலாவுதீன் கோரிக்கை குறித்து பேசினார்.மாவட்ட பொதுச்செயலாளர் இதாயத்துல்லா, தொழிற்சங்க தலைவர் முஜிபுர் ரகுமான், பெண்கள் அணி மாவட்ட தலைவர் பாத்திமா முஸ்தபா, மாவட்ட செயலாளர் அன்வர் பாஷா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கைகளில் சிமினி விளக்கேந்தி கலந்து கொண்டனர்.

    ×